வியாழன், 9 ஜனவரி, 2014

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேபட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சார்பில், மீனவ கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடற்பாசி வளர்த்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சார்பில், ஐதராபாத் தேசிய மீன் வளர்ச்சி துறை நிதி உதவியின் கீழ், மீனவர் கிராம மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான ""கடல் பாசி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், பரங்கிப்பேட்டை உயராய்வு மையத்தில் நடந்தது. முகாமை, கடல் வாழ் உயிரின உயராய்வு மைய புல முதல்வர் கதிரேசன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில், சின்னூர், புதுப்பேட்டை மீனவர் கிராம மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராகப் பங்கேகற்ற, பல்கலைக் கழக வேளாண்மை புல முதல்வர் வசந்தகுமார் பேசு”கையில், கடல் பாசி வளர்ப்பு, பயன்பாடுகள், நுண்னுயிரியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கடற்பாசியின் பயன்பாடுகள், கடற்பாசி வளர்ப்பதால் விவசாயத் துறையில் ஏற்படும் லாபம் நட்சத்திர ஓட்டல்களில் கடற்பாசியின் தேவை குறித்து விரிவாக பேசினார்.உயராய்வு மைய பேராசிரியர்கள் வீரப்பன், சீனிவாசன், சண்முகம், ஆய்வு மைய மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உயராய்வு மைய பேராசிரியர் ஆனந்தராமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக