புதன், 15 ஜனவரி, 2014

கடற்கரையோரம் வெளிநாட்டு பறவைகள்...தஞ்சம்! பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 
பரங்கிப்பேட்டை:பிச்சாவரம் சுற்றுலா மைய வனக் காடு உள்ள கடற்கரை பகுதியில், அதிகளவில் குவியும் வெளிநாட்டு பறவைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. பரங்கிப்பேட்டை ,கிள்ளை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக் காடுகளுடன், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்து காணப்படுவதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பிச்சாவரத்தில் பறவைகள் தங்குவதற்கு வசதியாக பரந்து விரிந்த நிலையில் சதுப்பு நிலக் காடுகள் இருப்பதாலும், பாதுகாப்பான இடமாக இருப்பதாலும், உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து தங்கி செல்கின்றன. குறிப்பாக ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பறவைகள் பிச்சாவரத்திற்கு வந்து செல்கின்றன. பிச்சாவரம் சுற்றுலா மையம் வனத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், பறவைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. இதனால், இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் வருகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பிச்சாவரம் சுற்றுலா மைய வனக் காடு உள்ள கடற்கரை பகுதியில், அதிகளவில் குவியும் வெளிநாட்டு பறவைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.இயற்கை சூழல் நிறைந்த பிச்சாவரம் சுற்றுலா மைய கடற்கரை பகுதியில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வருவதும், அவை தண்ணீரில் அமர்ந்து உணவு சேகரிக்கும் கண்கொள்ளா காட்சியும் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக