பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே கடலில் குளித்து மூழ்கிய வாலிபர் உடல் நேற்று பரங்கிப்பேட்டை கடற்கரையோரம் கரை ஒதுங்கியது.
சிதம்பரம் துரவடித்தெருவைச் சேர்ந்தவர் திருக்குமரன் (18). இன்ஜினியரிங் மாணவர். பக்கத்து வீட்டை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீதர் (16). இருவரும் கடந்த 13ம் தேதி பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடலில் குளித்தனர். ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர். இதில், திருக்குமரன் உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக கடலில் மூழ்கிய ஸ்ரீதரை மீனவர்கள் உதவியுடன் அவரது உறவினர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கடலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீதர் உடல் மிதந்தது.
தகவலறிந்த போலீசார் புதுப்பேட்டை மீனவர்கள் உதவியுடன் ஸ்ரீதரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக