பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையிலிருந்து புறப்படும் அநேக பேருந்துகளின் கட்டணம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடிரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் பதினைந்து ரூபாயாக இருந்தது. ஆனால் தற்பொழுது அதை பதினாறு ரூபாயாக திடீரென உயர்தியுள்ளார்கள்.
டீசல் கட்டணத்தை காரணமாக காட்டும் பேருந்து உரிமையாளர்கள். இதன் அடிப்படையில் கடலூரில் இருந்து புறப்படும் பரங்கிபேட்டை உள்ளிட்ட சிதம்பரம் மற்றும் புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்து கட்டணங்கள் உயர்தபட்டுள்ளதாக அவர்கள் தெரிவிதுள்ளனர். இவ்வாறு எந்த முன்னறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து பரங்கிப்பேட்டை - பண்ருட்டி மார்க்கத்தின தனியார் பேருந்தான துர்கா பேருந்தில் நடத்துனராக பணிப்புரியும் சீனு என்பவரிடம் விசாரித்ததற்க்கு அவர் கூறியதாவது: நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் இந்த நிலை எற்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்தபட்ட கட்டணமாக இருந்த ஐந்து ரூபாய் (Rs 5) கட்டணம் ஆறு ரூபாயாகவும் (Rs 6), அதேபோன்று அனைத்து கட்டணத்திற்க்கும் ஒரு ரூபாய் (Rs 1) முதல் இரண்டு ரூபாய் வரை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று ஒரு ரூபயாக உயர்ந்துள்ள நிலை நாளை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். மேலும் அரசு பேருந்துகள் விலையை உயர்த்தினாலும் தனியார் பேருந்துகளில் விலை உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். நான்கு நாட்களாக பேருந்து கட்டண உயர்வு நீடித்து வருகிறது என்பதும் அவரது கூற்றிலிருந்து இருந்து தெரியவந்தது.
நன்றி:MYPNO.COM









0 கருத்துகள்:
கருத்துரையிடுக