
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர், வேளங்கிராயன்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்ஜின் படகுகள், விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று வஞ்சரம், சூரை, கவலை, கெளுத்தி, பாரை, அகிலா, மத்தி உள்ளிட்ட மீன் வகைகளை அதிகளவில் பிடித்து அன்னங்கோவில் மீன் இறங்குதளத்திற்கு விற்பனை கொண்டு வருகின்றனர்.
மீன் வியாபாரிகள் உயர்ரக மீன் வகைகளை ஏலம் எடுத்து, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்து கனரக வாகனங்கள் மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். தினமும் இங்கிருந்து 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.
தற்போது கடந்த இரண்டு மாதங்களாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் குறைந்த அளவிலான மீன்களே கிடைத்து வருகிறது. இதனால் மீன் விலை அதிகரித்ததுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளைக் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன் வியாபாரிகள் விற்பனைக்காக கேரளாவில் இருந்து கவலை மீன்களை இங்குக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். சாதாரணமாக கவலை மீன் 30 கிலோ கொண்ட பாக்ஸ் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. நேற்று 30 கிலோ பாக்ஸ் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் அன்னங்கோவில் வத்தகரை பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக மீன் பிடிக்க செல்லாததால் அன்னங்கோவில் வத்தகரை மீன் இறங்குதளம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் கேரளாவில் இருந்து மீன்கள் இங்குக் கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக