பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் தேசிய கடல்மீன் கழக நிதி உதவியுடன் கடல்பாசி வளர்ப்புப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.தொடக்க விழாவில் உயராய்வு மைய இயக்குநரும், கடல்வாழ் அறிவியல் புல முதல்வருமான பேராசிரியர் கே.கதிரேசன் வரவேற்றார்.
கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் என்.வீரப்பன் கடல்பாசிகளின் பயன்கள் குறித்து பேசினார். பேராசிரியர் எம்.சீனுவாசன் கடல் வளம் குறித்துப் பேசினார்.
முகாமில் பிளெஸ், கிரீடு, அன்புமணி அறக் கட்டளை உள்ளிட்ட 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்பயிற்சி வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக