கடலூர்:வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என்று கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உதவி தொகை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து, 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள தகுதி வாய்ந்த மனுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான கல்வித்தகுதி, 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி மற்றும் பட்டயப்படிப்பு, முதுகலை பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள். (பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகள் நீங்கலாக)
வயது வரம்பு
விண்ணப்பதாரரது குடும்பத்தின் மொத்த வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அல்லது ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் மேற்படக்கூடாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது மற்றும் இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்த விதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடம் இருந்தோ அல்லது அரசிடம் இருந்தோ வேறு எந்த வகையிலும் எந்த விதமான உதவி தொகையும் பெறுபவராகவோ இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ– மாணவிகளாக இருக்கக்கூடாது. (இந்த நிபந்தனை தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தாது.) இந்த திட்டத்தின் ஏற்கனவே பயன்பெற்ற விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக