பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தில் உள்ள, வயல் அருகே மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிக் கூட்டை, அவ்வழியாகச் சென்ற ஒருவர், நேற்று மாலை, கல்லால் தாக்கி களைத்துள்ளார்.
அதிலிருந்த வெளியேறிய குளவிகள், அங்குள்ள நிலத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (70) மனைவி குமாரி (60), ராஜேஸ்வரி (30), கோமதி (40), நாகராஜ் (13), தமிழ்ச்செல்வி (18) உட்பட 9 பேரை தாக்கியது.
இதில், காயமடைந்த அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கடலூர்
அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
படம்:mypno









0 கருத்துகள்:
கருத்துரையிடுக