பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டையில் மீன்பிடிக்கச் சென்ற போது படகு
கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ராயன் (61). மீனவர். இவரும் இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52), மதன்ராஜ் (23), சூர்யா (24) ஆகியோர் ராஜா என்பவருடைய விசைப்படகில் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந் ததால் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள் ளானது.
இதில் சுப்ராயன் கடலில் மூழ்கி இறந்தார். மற்ற மூவரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
தகவலறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன் இறந்த சுப்ராயன் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின் றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக