கலவரங்களின் வழியே ஆட்சியைப் பிடிப்பது என்பது பா ஜ க வின் வழிமுறை.
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்து வெறியைத் தூண்டி விட்டுக் கலவரங்கள் நடத்தி அதன் வழியே அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் வழக்கம்..
உ பி மாநில முஸஃபர் நகர் கலவரம் சமீபத்திய சான்று.
தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்கு அக்கட்சி வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தும் உடனடியாக எதுவும் கிடைக்காததால் திரைப்பட இயக்குநர் "சீமானைக் கண்டித்து" என ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து கலவரத்துக்கு முயன்றுள்ளனர்.
வாஜ்பேய், ஆட்வானி என இருவர் மட்டுமே இருந்த கட்சி(ஜனசங்), ஜனதாவில் இணைந்து பாரதீய ஜனதாவாகப் பரிணமித்தபின் மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவு வளர்ந்தது வெறித்தனமான பேச்சுகளின் மூலம் கலவரங்களைத் தூண்டி விட்டதால்தான் என்பது கடந்தகால ஊடகப் பதிவுகளைப் பார்த்தால் புலனாகும்.
தமிழ்நாட்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான எச் ராஜா, திரைப்பட இயக்குநர் "சீமானைக் கண்டித்து" என்ற போர்வையில் சிறுபான்மையினரான முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிக இழிவாக ஆத்திரமூட்டும் படிபேசியுள்ளார். அது 'யூட்யூப்' வழியாக இணையத்தில் ஆயிரக்கணக்கானோரிடம் பரவுகின்றது.
சீமான் பா ஜ கவின் அரசியல் எதிரிகளான காங்கிரஸுக்கும் தி மு க வுக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்பவர். அதனால் ஆதாயம் அடையப்போவது இவர்கள்தாம். சீமானின் கட்சி நாம் தமிழர் எனப்பெயர் வைத்திருந்தாலும், மும்பையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடத்திய பயங்கரவாத சிவசேனாவுக்காக அண்மையில் ஓட்டு வேட்டையாடியவர் இவர். பா ஜ க வின் கலவரத்துக்கு வித்திடும் வன்முறைப் பேச்சுக்கு ஒரு முகமூடியே "சீமானைக் கண்டித்து" என்பது!
ராமன் எந்தக் கல்லூரியில் எஞ்சினீரிங் படித்தான் என்று கருணாநிதி கேட்டதற்கு அவரின் தலையைக் கொய்து நாவைத் துண்டிக்கும்படி வி எச் பியைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் அழைப்பு விடுத்தார்.
அண்மையில் சன் டி வி வீரபாண்டியன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு அவரது "நாவை அறுத்திருப்பார்கள்" என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார்.
கருத்து சுதந்திரம் என்பது காவிகளுக்கு மட்டும்தான்.
கருணாநிதியும் வீரபாண்டியனும் சொன்னவை அவதூறு அல்ல. ஆனால் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான முகமது நபிகளையும் கிறிஸ்தவர்களின் உயிருக்கும் மேலான கன்னி மேரியையும் இயேசுவையும் மிகக் கீழ்த்தரமாக ஆபாசமாகப் பேசுவது எவ்வகைச் சுதந்திரம்?
ராஜா பேசிய பேச்சுக்கு எதை அறுப்பது என்பதை இந்துத்துவாவினர் சொல்வார்களா?
இவர்களது நோக்கம், இப்படிப் பொதுக்கூட்டத்தில் பேசுவதன் மூலம் ஆத்திரப்படும் யாராவது எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்களா... அதன் மூலம் கலவரத்தைத் தூண்ட முடியுமா என்பதே.
தேர்தல் நெருங்க நெருங்க இவர்களது வெறிப்பேச்சு மேலும் தொடரும். அதன் மூலம் ஓட்டு அறுவடை என்பதே பார"தீய" ஜனதா கட்சியின் நோக்கம்.
- நச்சினார்க்கினியன்
நன்றி:இந்நேரம்









0 கருத்துகள்:
கருத்துரையிடுக