சனி, 11 ஜனவரி, 2014

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி ( படங்கள்)

வாஷிங்டன்அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடும் குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா  நீர்வீழ்ச்சியே உறைந்து போயுள்ளது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றையும், ஆர்க்டிக் பிரதேசத்தில் வீசி வரும் பனிப் புயலால் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிர் காற்றும் அமெரிக்க மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உறைந்திருக்கும் நயாகராவை காண பலரும் குளிரையும் பொருட்படுத்தாமல் வந்துக்கொண்டிருக்கின்றனர்.







நயாகரா கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது. அமெரிக்கப் பகுதியில் உள்ள நயகாராவில் உறைந்து போயிருக்கும் பகுதிகள் நிறைய உள்ளன. மொத்தம் 3 இடங்களில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாக காட்சியளிக்கிறது

அமெரிக்காவில் மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக இங்கு குளிர் காணப்படுகிறது. இந்த குளிரானது சிகாகோவில் மைனஸ் 37 டிகிரியாக ஆனபோது லிங்கன் பூங்காவில் இருந்த பனிக்கரடிகள், பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன
இந்நிலையில் ,நயாகரா நீர்வீழ்ச்சியின் கீழே தண்ணீர் விழும் இடத்தில் ஐஸ் கட்டிகள் மலை போல குவிந்து கிடக்கின்றன

இதற்கு முன், 1912 ஆம் ஆண்டில்தான் நயாகாரா கடும் பனி காரணமாக உறைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக