சனி, 11 ஜனவரி, 2014

பரங்கிப்பேட்டை அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

பரங்கிப்பேட்டை  :பரங்கிப்பேட்டை அருகே கல்லூரி மாணவியிடம் பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறித்துச் சென்றதாக பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அருகே கனக்கம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பிரசன்யா (20). இவர்  சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிரசன்யா கல்லூரிக்கு வந்து விட்டு சைக்கிளில் சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக ஊர் திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக் வந்த மர்மநபர் பிரசன்யா அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்.
 இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளானர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக