மணிலா:இதுவரை காலத்தில் இல்லாத அளவுக்கு பெரியதான புயலலொன்று
பிலிப்பைன்ஸ் தீவுகளின் மையப்பகுதிகளை தாக்கியுள்ளது.வீடுகளின் கூரைகள் தூக்கி விசப்பட்டதுடன், தெருக்களில் உள்ள மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை முதலில் மணிக்கு 300 கிலோமீட்டர்களுக்கும்
அதிகமான வேகத்தில் தாக்கிய சூப்பர் தைப்பூன் ஹையான் என்னும் இந்தப் புயல், பல
கடற்கரை கிராமங்களை நீரில் மூழ்கடித்துவிட்டது.
புயல் கடந்த வழியில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
அகற்றப்பட்டனர்.பல இடங்களில் பெருத்த வெள்ளமும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளன.
உயிரிழப்புக்கள் மற்றும் ஏனைய சேதங்கள் பற்றி கணக்கிட பல நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக