வெள்ளி, 8 நவம்பர், 2013

ஷமி வேகத்தில் சுருண்டது மே.இ.தீவுகள்! இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!


கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
கொல்கத்தாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய
அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ரோஹித் சர்மா 127 ரன்களுடனும் அஸ்வின் 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்திருந்தது
ரோஹித் சர்மா 177 ரன்களுடனும் அஸ்வின் 124 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக இந்தியா 453 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 மேற்கிந்திய தீவுகளைவிட 219 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருந்தது இந்தியா.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷில்லிங்போர்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடந்து ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறினர்.
மேற்கிந்திய தீவுகள் அணி 168 ரன்களுககுள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ப்ராவே 37 ரன்களும், பவுல் 36 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது


சச்சின் டெண்டுல்கரின் 199வது டெஸ்ட், 3ஆம் நாளில் முடிந்து போனது. காரணம் இந்தியாவின் புதுமுக வேகப்புயல்முஹமது ஷமி . இவரது பயங்கரமான ரிவர்ஸ் ஸ்விங் மேற்கிந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை உடைத்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் முஹமது ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.


சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட்டில் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் விளையாடிய 199வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இதனால் கொல்கத்தா ரசிகர்கள் சச்சினுக்கு பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக