மேற்குக்கரை: யாஸிர் அரஃபாத்தின் மரணத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஃபலஸ்தீன் குற்றம் சாட்டியுள்ளது.
ஃபலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யாஸிர் அரஃபாத்தின் மரணத்தை விசாரித்துக் கொண்டிருக்கும் ஃபலஸ்தீனக் கமிட்டி, இஸ்ரேல் மட்டும்தான் இந்த விஷயத்தில் இருக்கும் ஒரே சந்தேகப்படக்கூடிய அமைப்பு என்று கூறுகிறது.
2004ல் அரஃபாத்தின் மரணம் குறித்த மிகச் சமீபத்திய விஞ்ஞான அறிக்கைகள் அவர் முதுமையாலோ, உடல்நலக் குறைவாலோ இறக்கவில்லை, மரணமும் இயற்கையாக நிகழவில்லை என்பதைக் காட்டுவதாக இந்தக் குழு கூறியது.
முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவதற்கு தனது விசாரணைகள் தொடரும் என்றும் அந்தக் குழு கூறியது. இந்த வாரம் முன்னதாக வந்த சுவிஸ் நாட்டு வல்லுநர் குழு அறிக்கை ஒன்று, தோண்டியெடுக்கப்பட்ட ஃபலஸ்தீனத் தலைவர் அரஃபாத்தின் உடலில், சாதாரணமாக இருக்கும் கதிரியக்கப் பொருளான போலோனியம் அதன் அளவை விட 18 மடங்கு அதிகம் இருந்தது என்று கூறியது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக