புதன், 6 நவம்பர், 2013

பரங்கிப்பேட்டை அருகே கடலில் மாயமான மாணவன் கடலில் மூழ்கி பலி உடல் கரை ஒதுங்கியது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கடலில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் நேநற்று கரை ஒதுங்கியது.கிள்ளை அடுத்த மீதிக்குடியைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ராம்குமார் (17), ராமமூர்த்தி (15). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். மூவரும் கடந்த 3ம் தேதி சாமியார்பேட்டையில் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி மூவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதில், ராமமூர்த்தி, பாண்டியன் இருவரும் நீந்தி கரைக்கு வந்தனர். ராம்குமார் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராம்குமாரை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையோரம் ராம்குமாரின் உடல் கரை ஒதுங்கியது.இதுகுறித்து ராம்குமாரின் தாய் எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக