ஜித்தா: சவூதி அரேபியாவில் வேலை அனுமதி ஆவணத்தை சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிடிபட்டுள்ளனர். சவூதியின் துறைமுக நகரமான ஜித்தாவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலீஸ் வாகனங்களில் அள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த பெருமளவிலான ஆசிரியர்கள் கற்பித்து வந்ததால் அவர்களின் தொழில் ஆவணங்களை இன்னும் சட்டபூர்வமாக்கிக்கொள்ள முடியாமல் போனதால் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. நகரங்களில் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிடிபட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் சட்ட ஆவணங்கள் இல்லாதுள்ள தொழிலாளர்கள் பலர் ஓடி ஒளித்து கொண்டுள்ளார்கள். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கு சவுதி அரேபியா நீண்ட காலமாக முயன்று வருகிறது. சவுதி மக்கள் செய்ய விரும்பாத சிறு சிறு தொழில்களை செய்து வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்தான் அரசாங்கத்தின் இந்த புதிய நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களின் தொழில் அனுமதி ஆவணங்களை சட்டபூர்வமாக்கிக்கொள்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இருந்த காலக்கெடு போதவில்லை என்று கூறுகின்றனர்.
சவூதி அரேபியாவின் பிரதான நகரங்களான ஜெத்தா, ரியாத், தமாம் நகர சாலைகளில் வெளிநாட்டவர் போக்குவரத்துக் குறைந்து காணப்படுகிறது. பல
நிறுவனங்களும், ஆவணங்களைச் சரிப்படுத்திக் கொள்ள இயலாமற் போன பணியாளர்கள் யாரும் சோதனையைத் தவிர்க்கும்பொருட்டு பணிக்கு வராதிருக்கப் பணித்துள்ளன. சவூதி அரேபியாவின் வணிகச் சந்தைகளிலும் கூட்டமின்றி காணப்படுகிறது. இதற்கிடையே, சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத்தின் பெண் ஆய்வாளர்களை வைத்து வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட செய்தியை அந்த அமைச்சக அதிகாரிகள் அழுத்தமாக மறுத்துள்ளனர்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக