ஸ்ரீஹரிகோட்டா: முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் இஸ்ரோ அனுப்பியுள்ளது.
ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள்
பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.சி-25 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக