கடலூர்கடலூர் மண்டலத்தில் ஆறு பத்திரப் பதிவு மாவட்டங்களில் உள்ள 60 பதிவாளர்
அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேற்று முதல் செயல்பட
துவங்கின.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏஜென்ட்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளை களையவும் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து பத்திரப் பதிவு அலுவலக நுழைவு வாயில் முதல் அலுவலகப் பணிகள் வரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவை நேற்று முதல் செயல்படத் துவங்கின.
மாவட்ட பதிவு அலுவலக அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடலூர் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய பதிவு மாவட்டங்களிலுள்ள 32 பதிவாளர் அலுவலகங்களிலும்; கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பதிவு மாவட்டங்களில் 28 அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, (நேற்று) முதல் செயல்பட துவங்கியுள்ளது' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக