பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப், அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் ஆராய்ச்சி மையம் மற்றும் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மையம் இணைந்து இன்று பரங்கிப்பேட்டையில் இரத்ததான முகாம் நடத்தியது. கடல்வாழ் ஆராய்ச்சி மையத்தில் நடைப்பெற்ற இந்த முகாமைகடல்வாழ் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் கே. கதிரேசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் தலைவர் ஏ.கே.டி. அன்சாரி தலைமை வகித்தார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். எஸ். முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார். கடலூர் இரத்த சேமிப்பு வங்கி அதிகாரி மருத்துவர் சாய்லீலா, புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் அமுத பெருமாள், கவுஸ் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் கணேஷ் நன்றியுரை வழங்கினார்.இந்த முகாமில் கடல்வாழ் ஆராய்ச்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். சேமிக்கப்பட்ட இரத்தம் உடனடியாக கடலூர் இரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.
நன்றி:MYPNO
செய்தி&படங்கள்











0 கருத்துகள்:
கருத்துரையிடுக