கடலூர்:கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதி கடற்க்கரையில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் 4–வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.வங்க கடலில் உருவாகி நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
மழையின் அளவு மி.மீ.,
லால்பேட்டை 50, கொத்தவாச்சேரி 46, காட்டுமன்னார்கோவில் 40, சேத்தியாத்தோப்பு 35, கடலூர் 34.90, புவனகிரி 29, வானமாதேவி 28, ஸ்ரீமுஷ்ணம் 26, சிதம்பரம் 26, பரங்கிப்பேட்டை 23, அண்ணாமலை நகர் 20.20, பெலாந்துறை 13, கீழ்செருவாய் 12, விருத்தாசலம் 7.40, லக்கூர் 7.30, குப்பநத்தம் 7, பண்ருட்டி 6, தொழுதூர் 6, மே.மாத்தூர் 5, வேப்பூர் 2 மி.மீ., என மாவட்டத்தில் சராசரியாக 20.18 மி.மீ., மழை பதிவானது.
நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. இதனால் மழை பெய்யும் எனக் கருதி கடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் காலை 8:00 மணிக்கு பிறகு வழக்கம் போல் வெயில் காயத் துவங்கியது.
கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக இருப்பதால் 4–வது நாளாக இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து வெகுவாக குறைந்தது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக