வியாழன், 7 நவம்பர், 2013

கடலூரில் நவ- 8 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 8ஆம் தேதி நடக்கிறது.
 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறை வங்கியில் விற்பனை அலுவலர் நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 8ஆம் தேதி, மதியம் 1 மணிக்கு நடக்கிறது.
 முகாமில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் கல்வி விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக