திங்கள், 4 நவம்பர், 2013

பரங்கிப்பேட்டையில் 36 மி.மீட்டர் மழை பதிவு

 
பரங்கிப்பேட்டை : கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.   அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 36 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
பரங்கிப்பேட்டையில் இன்றும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது
இதில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு மி.மீ., வருமாறு:
பரங்கிப்பேட்டை 36, சேத்தியாதோப்பு 22, புவனகிரி 18, அண்ணாமலை நகர் 14.60, கொத்தவாச்சேரி 14ம், காட்டுமன்னார்கோவில் 9, சிதம்பரம் மற்றும் லால்பேட்டை தலா 6, லக்கூர் 5.20, கடலூர் 4.60, ஸ்ரீமுஷ்ணம் 4, வானமாதேவி 1.20, விருத்தாசலம் 1 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 6.74 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 





 
படங்கள்:முக நூல் நட்புக்கள்
 

1 கருத்துகள்: