ராஜோகோட்:யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டிவென்டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
ராஜோகோட்டில் நடந்து முடிந்த இப்போட்டியில், 202 ரன்கள் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.
யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தவான் 32 ரன்களையும், கோலி 29 ரன்களையும் சேர்த்தனர். கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸ்சில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, துவக்க ஆட்டக்காரர் ஃபின்ச் 89 ரன்களும், மாடின்சன் 34 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் 27 ரன்களும், ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் நிலே ஆகியோர் தலா 12 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய தரப்பில், புவனேஷ்வர் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக