வியாழன், 10 அக்டோபர், 2013

நெருங்கும் பைலின் புயல்:கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

 
கடலூர்:அந்தமான் அருகே வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு  பைலின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவுபரவலாக கனமழை பெய்தது. கடலூர்,
பரங்கிப்பேட்டை  நெல்லிக் குப்பத்தில் இரவு  முதல் நள்ளிரவு வரை மழை பெய்தது. இரவில் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. 
பரங்கிப்பேட்டை ,கடலூரில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. புயல் சின்னத்தை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சூறைக் காற்றுடன்பலத்தமழை பெய்தது. நக்கரவந்தன்குடி, சித்தலாம்பாடி கிராமபகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றால்பல மின்கம்பங்கள் சாய்ந்தன. இது தவிர வடலூர், விருத்தசலம், பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திராவையும், ஒடிசாவையும் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புயல் தாக்குதலால் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கடும் மழை பொழிவும், பெரும் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது

ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்திற்கும் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கும் இடையில் கரையை கடக்கும் இந்த புயலால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக