சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புல முதல்வராக முனைவர் கே.கதிரேசன் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த விஞ்ஞானியான இவர் இதற்கு முன்பு பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கே.கதிரேசன் 1985-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மையத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தற்போது கடல் அறிவியல் புல முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 25 பி.ஹெச்டி மாணவர்களை உருவாக்கியுள்ளார். சதுப்பு நிலக்காடுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 1995-ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த விஞ்ஞானி விருதினை பெற்றுள்ளார். 2001-ஆம் ஆண்டு உலக மீன் ஆராய்ச்சி மையத்தின் நாகா என்ற உயரிய உலக விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற 2-வது இந்தியராவார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக