சென்னை: பாட்னா குண்டுவெடிப்பு சம்வத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நரேந்திர மோடி பேசவிருந்த பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பினை வன்மையாக கண்டிப்பதோடு, இச் சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை பாரபட்சமற்ற விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும்.இக்குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்திய கூட்டம் எதுவாக இருப்பினும், அவர்கள் நிச்சயமாக நம் நாட்டிலும், நாட்டு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக இருக்கவே முடியாது.மதச்சார்பற்ற சக்திகளின் தேர்தல் வெற்றியையும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவரின் அரசியல் முன்னேற்றத்தையும் தடுக்கும் விதமாகவே இக் குண்டுவெடிப்பு அமைந்துள்ளது. இச்சம்பவத்தின் மூலம் பி.ஜே.பி.யும், நரேந்திர மோடியும் அரசியல் ஆதாயம் அடைவார்கள் என்பதே யதார்த்தமாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 29 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)









0 கருத்துகள்:
கருத்துரையிடுக