செவ்வாய், 29 அக்டோபர், 2013

பி.முட்லூரில் வீட்டின் கதவை உடைத்து துணிகர கொள்ளை


பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
சிதம்பரம் அருகே பி.முட்லூர் ராஜலிசா தைக்கால் தெருவில் வசிப்பவர் சையது ஹாசின் (60). இவர் உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 பவுன் நகைகள் மற்றும் 75 கிராம் வெள்ளி பொருள்கள் திருடு போனது. இதுகுறித்து அருகே இருந்தவர்கள் சையதுஹாசினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக