பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில்
அவசரத்திற்காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு டாக்டர்கள் இல்லாததால்
வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை கச்சேரித் தெருவில் அரசு மருத்துவமனை உள்ளது. பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள பு.முட்லூர், அகரம், புதுக்குப்பம், சாமியார்பேட்டை, அரியகோஷ்டி, தச்சக்காடு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன்
உள் நோயாளிகள் வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் எக்ஸ்ரே , ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருந்தும் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளின் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஏழு டாக்டர்கள் பணியிடம் இருந்தும் தற்போது மூன்று டாக்டர்களே மாறி, மாறி பணிபுரிந்து வருகின்றனர்.
காலை நேரங்களில் வயதானவர்கள், கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள் என அதிகளவில் நோயாளிகள் இங்கு வந்தும், போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவமனையில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் அவர்கள் வேதனையுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனை அல்லது கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு காலவிரையம் ஏற்படுவதுடன் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விலை மதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்ற போதுமான டாக்டர்களை நியமிக்கவும், இரவு நேரங்களில் டாக்டர்கள் நியமிக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிப்பிரியர்கள் அட்டகாசம்
சமீப காலமாக மருத்துவமனையில் இரவு நேரங்களில் அந்தப் பகுதியைச் சேர்ந்த குடிப்பிரியர்கள்
அத்துமீறி உள்ளே சென்று மருத்துவமனையிலேயே படுத்து தூங்கி விடுகின்றனர். சில நேரங்களில் குடிப்பிரியர்களுக்கு மப்பு தலைக்கு ஏற நோயாளிகளிடம் தகராறு செய்து வருகின்றனர்.
குடிப்பிரியர்களைத் தட்டிக்கேட்கும் ஊழியர்களிடமும் தகராறு செய்து வருகின்றனர். மருத்துவ
மனையில் ஏதாவது விபரீதம் நடக்கும் முன்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக