சனி, 5 அக்டோபர், 2013

கடலூர் சிப்காட் பகுதியில் 300 மரங்கள் வெட்டப்படும் அபாயம்

கடலூர்: கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கும் பணிக் காக மிக பழமையான 300 மரங்கள் வெட்டப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்திடக்கோரியும் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் அருகே சங்கொலிக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வீரப்பன், அசோக், மோகன் ராஜ், குமரவேல் மற்றும்  காரைக்காடு, ஈச்சங்காடு பச்சையாங்கப்பம் உள் ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ராணுவ வீரர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் சிப்காட் பகுதியில் ஏற்கனவே சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு காற்று, நீர், நிலம் ஆகியன மாசு அடைந்துள்ளன. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக சிப்காட் பகுதியில் இருக்கும் மரங்களை பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கில் புதிய மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. மின்கம்பிகள் செல்வதற்கு வசதியாக சுமார் இரண் டரை கி.மீ தூரத்திற்கு சாலையோரம் அமைந்துள்ள பனை மரங்கள், தென்னை மரங்கள், கொன்றை, நாவல், புளிய மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் அபாயம் உள்ளது. அந்த மரங்கள் பல நூற் றாண்டு கடந்தவை. தனி யார் தொழிற்சாலையின் நலனுக்காக ஒட்டு மொத்த இயற்கை வளமும் அழிக்கப்படுவதற்கு மாவட்ட நிர்வா கம் அனுமதிக்கக்கூடாது. தேவை என்றால் பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கலாம். சுற்றுச்சூழலை பற்றியும் பொதுமக்களின் நலனை பற்றியும் கவலைப்படாமல் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டால் மிகப்பெரிய போராட்டத்தை கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்துவார்கள். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக