பண்டர் செரி: புருனை அரசு, நாட்டில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வேண்டி தண்டனைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த புருனை, 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஹசனல் போல்கையா சுல்தானால் ஆட்சி செய்யப்படும் புருனையின் மக்கள் தொகையில் 70% முஸ்லிம்களாகும். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது நாட்டில் பெருகி வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், தண்டனைகளை கடுமையாக்க புருனை சுல்தான் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, விபசாரத்தில் ஈடுபடும் கள்ளக்காதலர்களுக்கு மரணதண்டனை, திருட்டுக்கு கை துண்டித்தல் மற்றும் மது அருந்தினால் சவுக்கடி போன்ற தண்டனைகள் வழங்கப்பட இருக்கிறது. இத்தண்டனைகள் இஸ்லாமிய சட்டங்களின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக