கடலூர்: கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த மாணவியொருவரை கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
இன்று காலை நடந்த இந்தக் கொடூரம் பற்றி கூறப்படுவதாவது:
கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில்
மகாலட்சுமி என்னும் மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்துவந்தார். இன்று காலை தான் படித்து வந்த கல்லூரி வாசலிலேயே மகாலட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குருதி வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். கொலையாளி தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் வந்து உடலைப் பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த சக மாணவ-மாணவிகள் மாணவியின் உயிரற்ற உடலை பார்த்து கதறி அழுதனர். ஒரு மணிநேரத்துக்கு முன்பு வகுப்பில் தங்களோடு ஒன்றாக இருந்து பேசிக்கொண்டு இருந்த மகாலட்சுமியை பிணமாக பார்க்க சகிக்காமல் அவர்கள் அழுதனர்.
மகாலட்சுமியை கொலை செய்து விட்டு புதுநகர் போலீசில் சரண் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்து வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அவனது பெயர் தமிழ் செல்வன் என்றும். கொலையுண்ட மகாலட்சுமியின் தாய்மாமன் என்றும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியை தமிழ் செல்வன் சிறுவயது முதல் தான் காதலித்து வந்துள்ளார். ஆனால் மகாலட்சுமி திடீரென்று காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் அவரது கழுத்தை அறுத்து கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக