சிதம்பரம்: தமிழகத்தின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கும் முடிவுக்கு இந்தியக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் நேற்று கிடைத்துள்ளது.
முன்னதாக, நிர்வாகச் சீர்கேடுகள்; குளறுபடிகள்; மற்றும் நிதிப்பற்றாக்குறையாலும் அண்ணாமலை பல்கலைக் கழகம் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தது. இதனால் அப்பல்கலைகழகத்தை காலவரையறையின்றி மூடும் நிலை உருவானது.
பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் ஊழியர் அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு, கடந்த மே மாதம், பல்கலைகழகத்தை அரசுடமையாக்கும் திட்டம் வகுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மாநில அரசின் அத்திட்டத்தை அங்கீகரித்து குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதலளித்துள்ளார்.
எனவே, இனி அரசு சார்பில் அண்ணாமலை பல்கலை க்கழகம் இயங்கும் என்பது உறுதியாகும் விதமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளதை அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக