பீஜிங் :சீனாவில் சாலை விபத்து ஒன்றில் மூக்கு உடைந்த ஒருவருக்கு திசு வளர்ப்பு சிகிச்சை மூலம் நெற்றியில் மூக்கு வளர்க்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மேல் சிகிச்சை மட்டும் செய்துவிட்டு அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மூக்கு பகுதி காலபோக்கில் சிதைந்து காணப்பட்டது. இது அவருக்கு பெரும் தொல்லையாக இருக்க, முக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களை சந்தித்துள்ளார். சோதனையில் சிதைந்த மூக்கின் தொற்று காரணமாக மூக்கின் குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்ததுள்ளது தெரியவந்தது.
இதனை அடுத்து இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக இடுப்பெலும்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த புதிய மூக்கு விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது. ஜியோலியன் தனக்கு கிடைத்துள்ள புதிய மூக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக டாகடர்களுக்கு நன்றி பாராட்டி வருகிறார்











0 கருத்துகள்:
கருத்துரையிடுக