சனி, 14 செப்டம்பர், 2013

தமிழகத்தின் வெப்ப நிலை இனி வெகுவாக அதிகரிக்கும்

சென்னை :அடுத்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தின் வெப்பநிலை மூன்றரை டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு கணித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் வானிலை அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணினி உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் 1 டிகிரியும் 2050 ஆம் ஆண்டில் 2.1 டிகிரியும் 2100 இல் 3.4 டிகிரி அளவுக்கும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் கூறுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் வெப்ப நிலை 0 .7 டிகிரி அளவுக்கே உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து  அண்ணா பல்கலைக் கழகத்தின் பருவநிலை மாற்றத்துக்கான ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் ராமச்சந்திரன், கூருகை யில் உலகளாவிய தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் காரணமாக இந்த மாற்றங்கள் நடக்கும் என்று கண்டறிந்ததாக கூறினார்.

கோவை, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகள் வெப்பநிலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. கூடுதல் வெப்பம் காரணமாக நீர் ஆவியாவது அதிகமாகும், தாவர இனங்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும்.

இந்த மாற்றங்களால் ஏற்படக் கூடிய அழிவுகளில் இருந்து காக்கக்கூடிய பரிந்துரைகளையும் அண்ணா பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது. குறிப்பாக கார்பன் வெளியீட்டு வீதத்தை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக