கடலூர்:உத்தரப்பிரதேசத்தில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகளை கன்டித்து 14-09-2013 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட த மு மு க சார்பில் கடலூர் உழவர்சந்தை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுது.இந்த ஆர்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் எஸ்.ஜெய்னுல் ஆபிதீன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் வடக்கு மாவட்ட மமக செயலாளர் எம்.மதார்ஷா,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக வின் அமைப்புக் குழுத் தலைவர் எஸ்.முஹம்மது அய்யுப்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக வின் அமைப்புக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.யாசிர் அரபாத் உள்ளிட்ட கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகளும்,நகர,ஒன்றியங்கள்,பேரூர்,வார்டு,கிளை நிர்வாகிகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக