ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஈத்மிலன் & கட்டுரை போட்டி பரிசளிப்பு மனிதநேய விழா (படங்கள்)

பரங்கிப்பேட்டை :பரங்கிபேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்  மற்றும் ஈத் மிலன் விழா குழு இணைந்து ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாய்த்தினருடனும் பகிர்ந்துகொள்ளும் மனிதநேய நிகழ்ச்சி ஈத்மிலன் & கட்டுரை போட்டி  பரிசளிப்பு  விழா மீராப்பள்ளித்தெரு மஹ்மூதியா ஸாதி மஹாலில் நடைப்பெற்றது ,
நிகழ்ச்சியினை  M.H. கபீர் அஹமது மதனி அவர்கள்

(இறைவாழ்த்து) கிராத் ஓதி துவக்கி வைக்க , ஈத் மிலன் தலைமை அமைப்பாளர் L .ஹமீது மரைக்காயர் தொகுத்து வழங்க இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர், M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில் , இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர், கேப்டன். M.ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர். K.V.S. ஹபீப் முஹம்மது அவர்களும் , ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் முனைவர். M. அப்துஸ் ஸமது அவர்களும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்  .
























மாற்று சமூகத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைபோட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல் ,இரண்டாம், மூன்றாம் பரிசுகள் தலா ருபாய் 15,000, 10,000, 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள்,மற்றும் சான்றிதழ்களும் வழங்க்கப்பட்டன , முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல்பரிசுகள் வழங்கப்பட்டன, இம்மனித நேய விழாவில் பரங்கிப்பேட்டை  மற்றும்  கடலூர் மாவட்ட மாற்று சமூக சகோதரத்துவ மக்கள் பெரும் பலனோர் வந்திருந்து கலந்து கொண்டனர் வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு மதிய உணவு விருந்த்தளிக்கப்பட்டது .விழாவின்  அமைப்பாளர் L .ஹமீது மரைக்காயர் அவர்களும் அவரது குழுவினரும் சிறப்பான முறையில் விழா ஏற்பாட்டினை செய்திருந்தார்கள் 
நன்றி:படங்கள்,ஹம்துன் அஷ்ரப் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக