சென்னை: புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை.சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இதன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்கள் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதம் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி திறந்து வைத்தார். புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே மேற்கூரை (பால்சீலிங்) இடிந்து விழுந்தது.வருகைப் பகுதியில் இரு முனையங்களிலும் கூரை இடிந்து விழுந்தது. 3 முறை நடந்த இந்த விபத்துகளின் போது பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் விமான நிலையத்தில் மேற்கூரை இன்று 4-வது முறையாக இடிந்து விழுந்தது.உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையம் இணையும் வருகை பகுதியில் உள்ள 8-வது கேட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.20 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு ‘பால் சீலிங்' விழுந்த போது பயணிகள் யாரும் இல்லை. எனவே இந்த முறையும் எந்த உயிர்ச் சேதமும் இல்லை.ஒப்பந்ததாரர்கள் முறையாக இந்த பணியை செய்யாததாலேயே அடிக்கடி இடிந்து விழுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும் இதேபோல மேற்கூரை சரிந்து விழுந்தது. ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
சென்னை விமான நிலையத்தில்..4வது முறையாக பாதுகாப்பற்ற மேற்கூரை இடிந்தது!
சென்னை: புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை.சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இதன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்கள் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதம் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி திறந்து வைத்தார். புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே மேற்கூரை (பால்சீலிங்) இடிந்து விழுந்தது.வருகைப் பகுதியில் இரு முனையங்களிலும் கூரை இடிந்து விழுந்தது. 3 முறை நடந்த இந்த விபத்துகளின் போது பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் விமான நிலையத்தில் மேற்கூரை இன்று 4-வது முறையாக இடிந்து விழுந்தது.உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையம் இணையும் வருகை பகுதியில் உள்ள 8-வது கேட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.20 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு ‘பால் சீலிங்' விழுந்த போது பயணிகள் யாரும் இல்லை. எனவே இந்த முறையும் எந்த உயிர்ச் சேதமும் இல்லை.ஒப்பந்ததாரர்கள் முறையாக இந்த பணியை செய்யாததாலேயே அடிக்கடி இடிந்து விழுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும் இதேபோல மேற்கூரை சரிந்து விழுந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக