சென்னை : "தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்க்ஷேவும், முஸ்லிம்களைக் கொன்றொழித்த மோடியும் ஒன்றே" என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் கூறியுள்ளது.
திருச்சி பாஜக மாநாட்டில் நரேந்திர மோடி வருகையை எதிர்த்து நேற்று காலை மக்கள் கலை இயக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளை செயலாளர் வ.கார்த்திகேயன், "குஜராத் உண்மையில் 69 சதவிகிதம் ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், சுகாதாரத்திற்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 சதவிகிதம் ஒதுக்குவதிலும், 69.7 சதவிகிதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதிலும், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதிலும் தான் குஜராத் முன்னிலை வகிக்கிறது.
லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபக்சே கூறுவதுபோல, ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்றொழித்து விட்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும், பாஜகவும் ஏற்படுத்தி வருகின்றனர்." என்று அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக