வெள்ளி, 13 செப்டம்பர், 2013

உ.பி:குஜராத் போன்று காவிகளால் கொள்ளப்படும் முஸ்லீம்கள் :அடைக்கலம் தந்து காத்த ஜாட் நபர்!

முசாபர் நகர், உ.பி.: ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வன்முறை மூண்டுள்ள முசாபர் நகர் பகுதியில், வன்முறையாளர்களிடம் சிக்கி விடாமல், முஸ்லீம்கள் 150 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளார்.இந்த 150 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். ராணுவமும் அங்கு தற்போது முகாமிட்டுள்ளது.இந்த
நிலையி்ல் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்த செயல் அனைவரையும் நெகிழ வைப்பதாக உள்ளது

அவரது பெயர் பிஜேந்திர சிங். கரத் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது வீடு மிகப் பெரியது. இந்த வீட்டில்தான் தனது ஊரைச் சேர்ந்த முஸ்லீம்களை இவர் தங்க வைத்து பாதுகாப்புடன் பார்த்துள்ளார்.இவரது வீட்டில் முஸ்லீம் சமுதாயத்தினர் அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அங்கு ராணுவம் விரைந்து வந்தது. 2 நாட்கள் வன்முறையாளர்களின் பிடியில் இவர்கள் சிக்கி விடாதபடி பாதுகாப்புடன் வைத்திருந்துள்ளார் பிஜேந்திர சிங். ராணுவம் வந்து பின்னர் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது.தனது குடும்பத்தினருக்கு வன்முறையாளர்களிடமிருந்து வந்த மிரட்டலைக் கூட புறக்கணித்து விட்டு முஸ்லீம் சமுதாயத்தினரை இவர் பாதுகாத்துள்ளார் என்பதுதான் முக்கியமானது
 
இவரே அனைவருக்கும் சாப்பாடு கொடுத்துள்ளார். ராணுவம் வந்து அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றபோது அவர்களை பிஜேந்திர சிங்கின் மனைவி கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்தார்.இதுகுறித்து பிஜேந்திர சிங் கூறுகையில், வெளியில் வன்முறையாளர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். முஸ்லீம்களை வெளியே விடு இல்லாவிட்டால்,வீட்டை நொறுக்குவோம் என்று அவர்கள் கத்தினர். சுவரேறி வந்து விடுவதாகவும் மிரட்டினர். ஆனால் நான் பயப்படவில்லை. அவர்களும் வரவில்லை. மீறி வந்திருந்தாலும் நான் சமாளித்திருப்பேன் என்றார்.

இந்த கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லீம் மட்டு்மே வன்முறைக்குப் பலியானார்.150பேரும் போன நிலையில், செவ்வாய்க்கிழமையன்றும் தனது வீட்டில் 12 முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றியுள்ளார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது 

http://tamil.oneindia.in/news/2013/08/27/india-lawless-up-4-journalists-killed-past-45-days-in-state-182126.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக