பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் காலணியை சேர்ந்த முத்தமிழன், ஸ்ரீகாந்த், சரவணமூர்த்தி, விக்னேஷ், முத்துராஜ் ஆகியோருக்கும், கரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், சத்தியமூர்த்தி ஆகியோருக்கும் இடையே பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டது.
இதைபார்த்த பொது மக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்தமிழன், ஸ்ரீகாந்த், சரவணமூர்த்தி, விக்னேஷ் உள்பட 11 பேர் சேர்ந்து ராஜேசின் வீட்டிற்கு அவரது தந்தை ராஜேந்திரனிடம் வீண்தகராறு செய்து, ஆபாசமாக திட்டி, தாக்கியதாக தெரிகிறது.
இதில், ராஜேந்திரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு முத்தமிழகன் (21), ஸ்ரீகாந்த் (29), சரவணமூர்த்தி (21), விக்னேஷ் (20), முத்துராஜா (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், கார்த்திக், ராஜேந்திரன், சிவகுரு, கலைமணி, செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இப்பிரச்சினை சம்பந்தமாக செல்வம் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில், ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது 20), ஞானசேகரன் மகன் சத்தியமூர்த்தி (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 7 பேரை போலீசார் கைது, 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக