பரங்கிப்பேட்டை:மீன் வியாபாரியைத் தாக்கிய நான்கு பேரை போலீசார்
கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சாமி என்கிற
கருணாகரன் (55). பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் வாங்கி விற்பனை செய்து
வருகிறார். இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த ராகேஷ், கலைமணி உட்பட
நான்கு பேர் கடலில் பிடித்து வந்த மீன்களை சாமியிடம் விற்றனர். ஆனால் பணம் தர
காலதாமதம் ஏற்பட்டதால் அவர்கள் சாமியிடம் பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்குள்
தகராறு ஏற்பட்டு சாமி தாக்கப்பட்டார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து
ராகேஷ் (29), கலைமணி (26), கார்த்திகேயன் (50), ஸ்ரீதர் (22 ) ஆகிய நான்கு பேரை
கைது செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக