சனி, 31 ஆகஸ்ட், 2013

துபாயில் திருக்குர்ஆனை எளிதில் புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு


துபாய்: துபாயில் திருக்குர்ஆனை எளிதில் புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பின் முதல் பிரிவு நிறைவு நிகழ்ச்சி கடந்த 23.08.2013 அன்று காலை துபாய் அல் மனார் சென்டரின் அல் பரஹா கிளையில் நடைபெற்றது.தஞ்சை ஜலாலுதீன் அவர்கள் பயிற்சியினை வழங்கினார். அப்துல் அஜீஸ் அவர்கள் வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தின்படி முதலாவது தொகுதியினை நிறைவு செய்தார்.இப்பயிற்சியின் மூலம் திருக்குர்ஆனை எளிதில் பொருள் உணுர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கல்பட்டு முஹம்மது அலி, கம்பம் மெரிட்கான் முஸ்தபா, அப்துல்லா உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இப்பயிற்சி வகுப்பு குறித்த தகவலை பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செயல்பட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இப்பயிற்சி வகுப்புகள் இணைய வழியிலும் நடத்தப்பட்டு வருகிறது.பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. பயிற்சி வகுப்பு குறித்த விபரங்களை 050 614 2633 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹைதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக