வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மதுஅருந்துமிடமாக மாறிய பரங்கிப்பேட்டை பஸ் நிலையம்

பரங்கிப்பேட்டை,பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் மது அருந்துமிடமாக மாறியுள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பரங்கிப்பேட்டை யில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுதவிர பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம், நீதிமன்றம், பத்திரபதிவு அலுவலகம், தொலைபேசி நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலங்கள் உள்ளது.
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்கு அன்றாட அலுவல்களுக்காக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் வந்து செல்வது வழக்கம்.
மேலும் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்கு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். பொது மக்கள் அதிகம் பயன்படுத்து இந்த பஸ் நிலையத்திற்குள் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அங்கு குடிப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி பஸ் நிலைய வளாகத்திலும்,அங்குள்ள பெட்டிக் கடைகளிலும் மது அருந்தும் இடமாக பஸ் நிலையம் மாறியுள்ளது.
 
பஸ் நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவிகள், பெண்கள் சிரமமடைந்து செல்கின்றனர். இது குறித்துபோலீசார் துரிதநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொது மக்கள் நலன்கருதி பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்குள்ள மதுக்கடைகளை மூட  நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 கருத்துகள்:

  1. Thanks for sharing. Action should have to be taken immediately with the help of notary public. Its so important.

    பதிலளிநீக்கு
  2. இது மிகவும் கண்டிக்கதக்கது,
    வெகு நாட்களாக நடந்துகொண்டுதான் இருக்கு.....
    தயவு சைது ஊரில் உள்ளவர்கள், முறையான நடவடிக்கை எடுக்கனும்.

    பதிலளிநீக்கு