வியாழன், 15 ஆகஸ்ட், 2013

செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி பிரதமர் சுதந்திர தின உரை


டெல்லி :நாட்டின் 67 வது சுதந்திர விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை வழங்கினார்இன்று காலை ராஜ்காட்டிற்கு சென்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், 07.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரதின உரையாற்றிய பிரதமர், இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மசோதா மூலம் நாட்டின் 75 சதவீதம் மக்கள் பயன்பெற முடியும் என்று கூறிய பிரதமர், உணவு பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், சமீப காலமாக உலக பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் உரையில் கூறினார். இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய பாதையை நாடு கடந்து வந்துள்ளதாக என பிரதமர் கூறினார். சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு பெரும் வருத்தமடையச் செய்துள்ளதாக கூறிய பிரதமர் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் தீ விபத்திற்கு உள்ளானது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்தது போன்ற துயர சம்பவங்கள் இனி நாட்டில் நடைபெறாது என்றும் பிரதமர் கூறினார். பாகிஸ்தான் பயங்கரவாத போக்கை நிறுத்திக் கொண்டால் மட்டுமே இரு நாடுகளுடனான சுமூக பேச்சை தொடர முடியும் என்றும் பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக