
கடந்த புதனன்று 'முல்லைப் பெரியாறு அணை மீதான கேரள அரசின் அத்துமீறல்' பற்றிய வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சந்திரமௌலி குமார் பிரசாத், மதன் பி. லோகுர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
'மக்கள் நலன் கருதி சட்டப்பூர்வமாக அணை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதை இடிக்க வேண்டும் என்பது கேரளத்தின் நிலைப்பாடு' என்று கேரள அரசின் சார்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார்.
ஆனால், இவ்வழக்கு கேரள அரசின் அத்துமீறல்கள் பற்றியதே என்று குறிப்பிட்ட நீதிபதிகள், "அணை பலவீனமாக இருப்பது தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து 2006-ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் அறிக்கை அளித்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி கேரளம் செயல்பட்டதற்கான காரணங்களைத்தான் நாங்கள் விசாரிக்கிறோம்" என்று கண்டிப்பு தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக