ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

திண்ணை விருதுகள் - 2013

பரங்கிப்பேட்டை:திண்ணை முகநூல் குழுமம் சார்பில், திண்ணை விருதுகள் 2013 பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட்டது. திண்ணை முகநூல் குழும பதிவுகளில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகள், தகவல்கள், பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து கீழ்கண்ட விருதுகளை திண்ணை குழுமம் வழங்கியுள்ளது. இதனை திண்ணை குழும நிர்வாகிகள் விருதுக்கு தேர்வானவர்களிடம் நேரில் சென்று வழங்கினர்.


அதன்படி, சிறந்த கட்டுரை மற்றும் சிந்தனை பதிவுகளுக்கான விருதை ஹம்துன் அஷ்ரப்-க்கும், .சிறந்த புகைப்பட பதிவுக்கான விருதை ஹாஜா முஹைதீனுக்கும், சிறந்த சமுக நல்லிணக்க கௌரவ விருதை மருத்துவர் பூபதிக்கும், சிறந்த ஊடக சேவைக்கான விருதை MYPNO தளத்திற்கும், சிறந்த நகைச்சுவை பின்னுட்ட கருத்தாளர் விருதுதை இக்பால் முஹம்மதுக்கும், சிறந்த மார்க்க பதிவு விருதை. முஹம்மத் ஃபைசலுக்கும், .சிறந்த வளரும் எழுத்தாளர் விருது செல்வி .சஞ்சீதா ஃபக்ருத்தீனுக்கும், .சிறந்த சமூக ஆர்வலர் விருது நௌஷாத் அலிக்கும் வழங்கப்பட்டது.







இந்த விருதுக்கான ஏற்பாடுகளை திண்ணை குழும நிர்வாகிகள்  முஹம்மது யாசின், ஸ்மார்ட் தமீம், ஜமால் மரைக்காயர், அப்துல் பாசித் மற்றும் கவுரவ உறுப்பினர் காதர் அலி ஆகியோர் செய்தனர்.
நன்றி : mypno .com 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக