செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை பகுதியில் 1355 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி

பரங்கிப் பேட்டைபரங்கிப்பேட்டை அருகே உள்ள சேவாமந்திர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு சிதம்பரம் சப்– கலெக்டர் (பொறுப்பு) பாதாளம் தலைமை தாங்கி னார். தமிழக சுற்றுலா வாரிய தலைவர் அருண்மொழித்தே வன், எம்.எல்.ஏ.க்கள் செல்வி ராமஜெயம், முருகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாமந்திர் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரி வரவேற்றார்.
விழாவில் தமிழக சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 7 பள்ளிகளை சேர்ந்த 1355 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கி பேசினார். விழாவில் சேவா மந்திர் பள்ளி நிறுவனர் பிரபாவதி, பள்ளி முதல்வர் லீலாவதி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக