திங்கள், 26 ஆகஸ்ட், 2013

உலக வெப்பமயமாதலுக்கு கடற்பரப்புகளும் காரணமாகின்றன: ஆய்வில் தகவல்

பாரிஸ்:மனிதனின் படிம எரிபொருள் கழிவுகள் கலப்பதால் கடல் நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறிவருகின்றது. இதனால் அதிகரிக்கும் வெப்பத்திலிருந்து பூமியை கவசம் போல் காக்கும் சல்பர் வாயு உற்பத்தி கடல்நீரில் குறையத் துவங்கியுள்ளதாக நேற்று வெளியாகி உள்ள ஆராய்ச்சித் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பூமியின் பாதுகாப்பு செயல்பாடுகள் நடைபெறவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். மனிதன் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு வாயுவினால் பூமி வெப்பமடைகின்றது. வளிமண்டலத்தின் வழியே பூமிக்கு வரும் சூரியனின் வெப்பத்தின் மீது பூமியின் வெப்பம் திரும்ப பிரதிபலிப்பதால், பசுமை சூழல் உருவாகுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரதிபலிப்பே கடல்நீரின் ரசாயன மாற்றங்களையும் சமன்படுத்தி, கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது. கடல்நீரில் உண்டாகும் டைமீதேல் சல்பைட் என்ற கந்தக வாயுவின் பிரதிபலிப்பே சூரியக் கதிர்கள் மீது பட்டு பூமியின் வெப்பத்தைக் குறைக்கின்றது காலநிலை மாறுதல்களினால், 2100ஆம் ஆண்டில் இந்த சல்பர் வாயுவின் உற்பத்தி 18 சதவிகிதம் குறையும்போது, பூமியின் வெட்பம் 0.48 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றது.

கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பதால் தோன்றும் கந்தக சுழற்சி மாற்றங்களினால் காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை தாங்களே முன்னிலைப்படுத்தியுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, எதிர்வரும் காலத்தில் கடல் உயிரியல் மட்டுமின்றி, காலநிலை மாற்றங்களும் கடல்நீரின் அமிலத்தன்மை கொண்டு கணிக்கப்படலாம் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக