சனி, 10 ஆகஸ்ட், 2013

கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் 11 பேர் கைது

சிதம்பரம்:சிதம்பரம் நகரில் இரவு ரோந்தின்போது கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியதாக அரிவாள்களுடன் 11 பேரை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.
அப்போது கனகசபை நகரில் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றுக் கொண்டிருந்த கும்பலைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மிளகாய் பொடி தூவி, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்தது.
இதையடுத்து 11 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: ஜெகதீசன் (32)- அங்காளம்மன் கோயில் தெரு, பி.முட்லூர், சுரேஷ் (36)- கனகசபைநகர், பழனி (36)- ஞானப்பிரகாசம்தெரு, மூர்த்தி (40)- கொட்டாப்புளிச்சாவடி, பாண்டியனின் மகன் மகேஷ் (25)- கனகசபைநகர், விக்னேஷ் (26)- பரங்கிப்பேட்டை அகரம், குமரன் (26)- ஆதனூர், தினேஷ் (23)-கொட்டாப்புளிச்சாவடி, வினோத் (28)-கனகசபைநகர், ராஜசேகர் (28)- கொட்டாப்புளிச்சாவடி, பரமசிவத்தின் மகன் மகேஷ் (25)- கனகசபைநகர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக